விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி மாடல் ஆனது கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஆனது கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே 35 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ப்ளூ, கிரே, லெதர் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.
குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications