இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி அளிவில் பிளிப்கார்ட், ரியல்மி இந்தியா வலைத்தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999-ஆக உள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி மாடலின் விலை ரூ.41,999-ஆக உள்ளது. மேலும் Dashing Blue மற்றும் Dashing Silver நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட சில சலுகைகளும் இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications