Just In
- 6 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 9 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 9 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 10 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
அடை மழையில் நனைய வைத்த அனுபமா பரமேஸ்வரன்.. உச்சுகொட்டி ரசிக்கும் ரசிகாஸ்!
- News
மருத்துவர் அறையில் தயாளு அம்மாள் கொடுத்த சூப்.. மிசாவை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.! நம்பி வாங்கலாமா?
சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் நிறை, குறைகளை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 186.5 கிராம். எனவே அனைத்து இடங்களுக்கும் அருமையாக எடுத்து சென்று பயன்படுத்த முடியும்.
பின்பு மற்ற ரியல்மி ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இதன்
மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இந்த சாதனம் அருமையாக பயன்படும். அதேபோல் பல ஆப் பயன்பாடுகளை சுலபமாக பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சாதனத்தைஅதிக வருடங்கள் பயன்படுத்த முடியும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தசாதனம் வெளிவந்துள்ளது.

இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய டிஸ்பிளே வசதி தான் இடம்பெற்றுள்ளது. அதாவது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வே சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக அனைத்து இடங்களிலும் தெளிவாக தெரியும்படி இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். இரவு நேரங்களில் கூட இந்த சாதனத்தின் கேமராக்களை பயன்படுத்தி துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். ஆனாலும் இந்த சாதனத்தில் 8எம்பி வைடு கேமராக்கு பதிலாக 12எம்பிவைடு கேமரா
இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்த சாதனத்தில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். இதற்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி அல்லது 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இருந்தபோதிலும் 65W SuperDart Charge பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜிஸ்மார்ட்போன். எனவே இதன் உதவியுடன் போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999-ஆக உள்ளது.
பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி மாடலின் விலை ரூ.41,999-ஆக உள்ளது. பின்பு Dashing Blue மற்றும் Racing Yellow நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது ரியல்மி ஜிடி 5ஜி.

குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் பேட்டரி வசதியை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470