Home
Mobile

இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்.! விலை இவ்வளவு தானா?

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் சற்று உயர்வான விலையில் வெளிவரும்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனங்களின் விலைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

டி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் சாதனம் ஆனது ரூ.25,999-விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.27,999-விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.30,000-விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி மாடல் ரூ.35,000-விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி 5ஜி சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் அம்சங்கள்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 எஸ்ஒசி
Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 4300 எம்ஏஎச் பேட்டரி
65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி ஜிடி 5ஜி

ரியல்மி ஜிடி 5ஜி

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில்

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி 5ஜி

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Realme GT 5G, Realme GT Master Edition with 64 Mega Pixel Camera Launching in India on August 18 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X