இந்தியாவில் ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 10 அறிமுகமா? விலை இது தானா?

|

ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. மேலும் அதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வண்ண விருப்பங்கள் போன்ற முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ரியல்மி நிறுவனம் வரும் ஜூன் 3 ஆம் தேதி, வியாழக்கிழமை அதன் ரியல்மி உலகளாவிய 5 ஜி உச்சி மாநாட்டை நடத்துகிறது, அந்த நிகழ்வின் போது நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி 5 ஜி சாதனத்தை உலகளவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி 5 ஜி போனின் விலை மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

ரியல்மி ஜிடி 5 ஜி போனின் விலை மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

ரியல்மி ஜிடி 5 ஜி பற்றிய முக்கிய விவரங்களை டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் டிவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். ஐரோப்பாவில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ கிளாஸ் மற்றும் எல்லோவ் (வேகன் லெதர்) வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இரண்டு வேரியண்ட் மாடல்களில் வருகிறது. ஐரோப்பிய சந்தைக்கான ரியல்மே ஜிடி 5 ஜியின் விலை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு யூரோ 400 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உயர் மாடலின் விலை என்ன?

உயர் மாடலின் விலை என்ன?

இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ .35,700 ஆகும். அதேபோல், ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு யூரோ 450 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ .40,200 ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் விலை யூரோ 20 (தோராயமாக ரூ. 1,700) மேலே குறிப்பிட்டதை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருப்பினும் நாளை அறிமுகத்தை போது முழு விபரம் தெரிந்துவிடும்.

மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமா?

ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமா?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில், அதன் உச்சி மாநாடு நிகழ்வை வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது, இது நாட்டில் ரியல்மி ஜிடி 5 ஜிக்கான வெளியீட்டு தேதி என்று ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், ரியல்மே ஜிடி 5 ஜியின் உலகளாவிய வெளியீடு குறித்து ரியல்மி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிப்ஸ்டர் தகவலின் படி இந்த சாதனம் இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி 5 ஜி சிறப்பம்சம்

ரியல்மி ஜிடி 5 ஜி சிறப்பம்சம்

ரியல்மி ஜிடி 5 ஜி ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் விவரக்குறிப்புகள் பற்றிய தகவல் நம்மிடம் உள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.43 இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 5 ஜி சாதனம் 4,500 எம்ஏஎச் பேட்டரியை 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுவந்துள்ளது.

மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!

இணைப்பு மற்றும் கேமரா அம்சங்கள்

இணைப்பு மற்றும் கேமரா அம்சங்கள்

இணைப்பு விருப்பங்களில் வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். கேமராவைப் பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 5 ஜி சாதனம் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இது 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமராவுடன், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸை கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT 5G Price, Colour Options Leak Before Global Launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X