Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் ஜூன் மாதம் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இப்போது இந்த
ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று வரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே 35 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ப்ளூ, கிரே, லெதர் போன்ற நிறங்களில் இந்த சாதனம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.31,440-ஆக உள்ளது. அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.37,000-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Realme GT 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X