Home
Mobile

கிட்ட நிக்க முடியாது.. X7 டிஸ்பிளே.. SONY கேமரா.. 24GB ரேம்.. 240W சார்ஜிங்.. CPU அட்ஜெஸ்ட்.. எந்த மாடல்?

ஒரேவொரு போனின் பெயரை கேட்டாலே, மார்கெட்டே அதிருமென்றால், அது ரியல்மி ஜிடி 5 (Realme GT 5) மாடலாகத்தான் இருக்கும். முதல்முறையாக டிஸ்பிளேவுக்கென பிரத்யேக சிப்செட், பிராசஸரின் கிளாக் ஸ்பீடையே அட்ஜஸ்ட் செய்யும் அம்சம் என்று பிரம்மாண்டத்தை கொண்ட போனாக இருக்கிறது.

இதுவரை வெளியாகி மார்கெட்டை வியக்கவைத்த போன்களை எல்லாம், 'ஒன்றுமே இல்லை' என்பது போல நினைக்க வைக்கும் அளவுக்கு ரியல்மி ஜிடி 5 போன், சோனி சென்சார் கேமரா, 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 240W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

SONY கேமரா.. 24GB ரேம்.. 240W சார்ஜிங்.. CPU அட்ஜெஸ்ட்.. எந்த மாடல்?

அதுபோதாது என்று, சூப்பர்ஃப்ரேம் சோலோ எக்ஸ்7 டிஸ்பிளே சிப் (Superframe Solo X7 Display Chip) மற்றும் சிபியு கிளாக் ஸ்பீடு அட்ஜெஸ்ட் (CPU Clock Speed Adjust) போன்ற பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் டிஸ்பிளே மற்றும் சிப்செட் அம்சங்கள் புதிய யுகத்தில் காலடி எடுத்து வைக்கப்போகின்றன. இந்த போனின் முழு அம்சங்கள், விலை, வெளியீட்டு தேதி விவரங்கள் பின்வருமாறு.

ரியல்மி ஜிடி 5 அம்சங்கள் (Realme GT 5 Specifications): இந்த ரியல்மி ஜிடி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, கிரிஸ்டல் கிளியர் தரத்தில் வீடியோ அனுபவத்தை கொடுக்கும் வகையில் இருக்கிறது.

இந்த ரியல்மி போனில் 2772 × 1240 ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் பிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 5 போனின் மெயின் கேமரா டிரிபிள் ரியர் சிஸ்டம் கொண்டுள்ளது. அதோடு பாக்ஸ் டிசைனில் கொண்ட எல்இடி லைட்டினிங் இடம்பெற்றுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 8 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. எச்டிஆர் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சோனி சென்சார் பயன்படுத்தப்பட்டிருப்பதால், போட்டோ மற்றும் வீடியோ குவாலிட்டி பிரீமியம் தரத்தில் இருக்கும். இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக பேட்டரி இருக்கிறது.

இந்த ரியல்மி மாடல் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 240W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4450mAh பேட்டரி வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் மொத்தமாக 4 வேரிண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கவிருக்கிறது.

அதாவது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor), டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது.

அதோடு வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. டைப் - சி சார்ஜிங் மற்றும் ஆடியோ போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த ரியல்மி ஜிடி 5 மாடல் ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதையடுத்து மற்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த போனின் விலை ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால், இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலும் இடம்பெற்றுள்ளதால், தொடக்க விலை ரூ.30,000 பட்ஜெட்டிலும் நிர்ணயம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 With X7 Display, 24GB RAM, 1TB Storage Launch On August 28 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X