Home
Mobile

மிரட்டிவிட்ட மாடல்.. 24GB ரேம்.. 240W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 1TB மெமரி.. 2 சிப்செட்.. ஒரேவொரு போன்!

உலகிலேயே எந்தவொரு போனிலும் கொடுக்கப்படாத வகையில் 24ஜிபி ரேம், 1டிபி மெமரி, 240W ஃபாஸ்ட் சார்ஜிங், 5240mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா மட்டுமல்லாமல், இன்னும் பல பிரம்மாண்ட அம்சங்களுடன் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5 (Realme GT 5) போன் வெளியாகயிருக்கிறது.

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் ரேம், சிப்செட் மற்றும் பேட்டரி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப 24 ஜிபி ரேம் கொண்ட போன்களின் அறிமுகம் அதிகரித்துவிட்டது. இதில் ஒன்பிளஸ், ரெட்மேஜிக் போன்ற நிறுவனங்களின் போன்களும் அடங்கும். ஆனால், இந்த மாடல்களையே தூக்கி சாப்பிடும் வகையில், ரியல்மி ஜிடி 5 போனின் அம்சங்கள் இருக்கின்றன.

24GB ரேம்.. 1TB மெமரி.. 2 சிப்செட்.. ஒரேவொரு போன்!

ரியல்மி ஜிடி 5 அம்சங்கள் (Realme GT 5 Specifications): இந்த ரியல்மி ஜிடி மாடலில் 2772 × 1240 பிச்சல்கள் ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கிரிஸ்டல் கிளியர் வீடியோ அனுபவத்தை கொடுக்க, பிரத்யேகமாக எக்ஸ்7 (X7) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

அதோடு ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி 5 மாடலின் மெயின் கேமரா டிரிபிள் ரியர் செட்டப்போடு வருகிறது. இந்த ரியர் கேமராவின் வலது புறத்தில் பாக்ஸ் எல்இடி ஸ்ட்ரிப் லைட்டினிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.

அதோடு 8 எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது. இந்த கேமராவில் 4K மற்றும் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி மாடலில் பிரம்மாண்ட அம்சமாக 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5240mAh பேட்டரி வருகிறது.
அதேபோல 240W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4450mAh பேட்டரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போனில் மொத்தமாக 4 ரேம் மற்றும் மெமரி மாடல்கள் இருக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய மாடல்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மேலும், பிரீமியம் போன்களில் கொடுக்கப்படும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டையை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டைப் - சி சார்ஜிங் மற்றும் ஆடியோ ஜாக் வருகிறது. இந்த பிரம்மாண்ட போன் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது.

அதன்பின் விற்பனைக்கு வருகிறது. அதற்கு அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த ரியல்மி போன் ரூ.40,000 அல்லது ரூ.45,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரலாம். இருப்பினும், இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட குறைந்தபட்ச மாடல், ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 With 24GB RAM 5240mAh Battery, 240W Fast Charging Confirmed Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X