Home
Mobile

உலகின் ஒரே போன்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 240W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும்படி 240W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 24ஜிபி ரேம், 1டிபி மெமரி, சோனி சென்சாருடன் டிரிபிள் கேமரா, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே என்று ரியல்மி ஜிடி 5 போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனுக்கு நிகராக எந்த போனும் கிடையாது என்று சொல்லக்கூடிய வகையில், ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5 (Realme GT 5) போனில் பிரம்மாண்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால், அந்த போன் மிட்-ரேஞ்ச் விலையில் விற்பனையாகும் 3 போன்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

24GB ரேம்.. 1TB மெமரி.. 240W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், அந்த போனின் புதுவிதமான டிசைன் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மிரளவே வைத்து விட்டது. இந்த போனின் முழு அம்சங்கள் என்ன? எப்போது விற்பனைக்கு வருகிறது? இந்த போனின் விலை பட்டியல் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரியல்மி ஜிடி 5 அம்சங்கள் (Realme GT 5 Specifications): இந்த ரியல்மி போன் 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது.

இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ரியல்மி ஜிடி போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா - வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களுடன் எல்இடி பாக்ஸ் லைட்னிங் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரியல்மி போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 4 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் மிகப்பெரும் அம்சமாக 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. அதேபோல 240W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4450mAh பேட்டரி கேபாசிட்டி கொண்ட மற்றொரு மாடலும் விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பிரீமியம் போன்களில் வரும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வை-பை 6, என்ஃஎப்சி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, டைப் - சி சார்ஜிங் போர்ட் போன்ற முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரியல்மி ஜிடி 5 போன் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முதலில் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த பிரீமியம் போனின் விலை ரூ.40,000 மற்றும் ரூ.45,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 With 24GB RAM, 1TB Storage 240W Fast Charging Launch On August 28 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X