Home
Mobile

விஸ்வரூப மாடல்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 240W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த போன்?

வெறும் 7 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் 240W சார்ஜிங், அல்டிமெட் பர்ஃபாமென்ஸூக்கு 24ஜிபி ரேம், கிரிஸ்டல் கிளியர் வீடியோவுக்கு அமோலெட் டிஸ்பிளே, கச்சிதமான போட்டோக்களுக்கு சோனி கேமரா என்று ஒட்டுமொத்த பிரம்மாண்ட அம்சங்களையும் ரியல்மி ஜிடி 5 போன் கொண்டுள்ளது.

ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5 (Realme GT 5), போனானது, அந்த நிறுவனத்தின் முதல் 24 ஜிபி ரேம் கொண்ட மாடலாகும். அதுமட்டுமல்லால், ஒட்டுமொத்த பிளாக்ஷிப் அம்சங்களையும் கொண்ட பிரீமியம் மாடல் என்ற பெயரையும் அந்த போன் மட்டுமே கொண்டுள்ளது. இதனால், உலகளவில் இந்த போனுக்கான வரவேற்பு மிகப் பெருமளவில் இருக்கிறது.

24GB ரேம்.. 1TB மெமரி.. 240W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த போன் குறித்த அறிவிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பே வெளியாகியது. அப்போதில் இருந்து, பல முறை அந்த போனின் அம்சங்கள் கசிந்துள்ளன. ஆனால், சிப்செட் மற்றும் ரேம் அம்சத்தை மட்டுமே ரியல்மி நிறுவனம் உறுதி செய்தது. இப்போது, ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் உறுதி செய்துள்ளது. இந்த அளவு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட போனின் விலை எவ்வளவு இருக்கும்? இதுவரை கசிந்த அம்சங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரியல்மி ஜிடி 5 அம்சங்கள் (Realme GT 5 Specifications): இந்த ரியல்மி போன் 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது.

அதோடு 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கொடுக்கப்படுள்ளது. ஆகவே, டிஸ்பிளேவை பொறுத்தவரை கிரிஸ்டல் கிளியர் வீடியோ அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 5 போன் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா - வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி கொண்ட மற்றொரு வேரியண்ட் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் 7 நிமிடங்களில் போனை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் ஆடியோ, ப்ளூடூத் 5.2, வை-பை 6, என்ஃஎப்சி மற்றும் டைப் - சி போன்ற முக்கிய அம்சங்களும் வருகின்றன. இந்த போன் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் விலை ரூ. 40,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 With 240W Fast Charging, Snapdragon 8 Gen 2 Confirmed Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X