இதுபோதுமே.. 50எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது தரமான ரியல்மி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி ஜிடி 5 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அதாவது ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தான் ரியல்மி ஜிடி 5 ப்ரோ போனை உருவாக்கி வருகிறது ரியல்மி நிறுவனம்.
குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5400 எம்எஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன்.
இதுதவிர 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். தற்போது ரியல்மி ஜிடி 5 ப்ரோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த ரியல்மி ஜிடி 5 போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 5 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 5 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 5 போனில் 2772 × 1240 ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் பிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது.
ரியல்மி ஜிடி 5 டிரிபிள் ரியர் சிஸ்டம் கொண்டுள்ளது. அதோடு பாக்ஸ் டிசைனில் கொண்ட எல்இடி லைட்டினிங் இடம்பெற்றுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. எச்டிஆர் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
சோனி சென்சார் பயன்படுத்தப்பட்டிருப்பதால், போட்டோ மற்றும் வீடியோ குவாலிட்டி பிரீமியம் தரத்தில் இருக்கும். இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக பேட்டரி இருக்கிறது.ரியல்மி ஜிடி 5 மாடல் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி கொண்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ரியல்மி ஜிடி 5 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor), டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது ரியல்மி ஜிடி.
வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. டைப் - சி சார்ஜிங் மற்றும் ஆடியோ போர்ட் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி ஜிடி 5 போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரியல்மி ஜிடி 5 அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








