Home
Mobile

இந்த போனுக்கு உலகமே வெயிட்டிங்! 50எம்பி EIS கேமரா,100W சார்ஜிங், 5240mAh பேட்டரி, 1TB ஸ்டோரேஜ்! என்ன மாடல்?

100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5240mAh பேட்டரி, ஓஐஎஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா, 1TB ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் ஒரு ஸ்மார்போன், அதுவும் ரியல்மி (Realme) ஸ்மார்ட்போன் வருகிறது என்றால்.. எதிர்பார்ப்புகள் எகிறத்தானே செய்யும்!

நாம் இங்கே பேசுவது ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

இந்த போனுக்கு உலகமே வெயிட்டிங்! என்ன மாடல்?

ரியல்மி ஜிடி 5 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ரியல்மி ஜிடி 5 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் என்பதிலும், இந்த சீரிஸின் கீழ் அறிமுகமான வெண்ணிலா மாடலான ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் (Upgraded Version) ஆக இருக்கும் என்பதிலும் சந்தேகமும் வேண்டாம்.

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய வட்ட வடிவிலான கேமரா செட்டப்பை (Circular Camera Setup) கொண்டிருக்கும். இந்த கேமரா செட்டப்பில் ஓவி64பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் (OV64B periscope telephoto sensor) இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை "டெலிஃபோட்டோ கிங்" (telephoto king) என்று அழைக்கிறது.

இந்த போனுக்கு உலகமே வெயிட்டிங்! என்ன மாடல்?

மெயின் கேமராவை பொறுத்தவரை, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization - OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Electronic image stabilization - EIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் 1/1.56 சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாரை பேக் செய்யும்.

மேலும் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஆனது குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான BOE பேனலையும் கொண்டிருக்கும்.

இந்த போனுக்கு உலகமே வெயிட்டிங்! என்ன மாடல்?

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் 6.78-இன்ச் (1,264 x 2,780 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோ மாடலின் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆனது சற்றே குறைவானதாக தெரிகிறது. ஏனென்றால் பேஸிக் மாடலான ரியல்மி ஜிடி 5 ஆனது 150W மற்றும் 240W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட்களில் அறிமுகமானது. 150W வேரியண்ட் ஆனது 5240mAh பேட்டரியை கொண்டுள்ளது; 240W வேரியண்ட் ஆனது 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்? இது வருகிற டிசம்பர் 7 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பிட்ட தேதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு) அறிமுகப்படுத்தப்படும் என்று ரியல்மி அறிவித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பின்படி ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தைக்கு வருமா என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் இப்போதைக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் என்றால் அது ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3) தான்!

Best Mobiles in India

English summary
Realme GT 5 Pro Launch Date Confirmed on December 7 All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X