அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 100W சார்ஜிங்.. 24ஜிபி ரேம்.. AMOLED டிஸ்பிளே..எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 7-ம் தேதி சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு தான் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது இது குறித்து சற்று விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது 6.7-இன்ச் 1.5கே AMOLEDடிஸ்பிளே உடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட், டி.சி. டிம்மிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி பிரைமரி சென்சார்(Sony LYT-T808 sensor) + 50எம்பி டெலிபோட்டோ சென்சார் ( Sony IMX 890) + 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் என்கிற டர்பிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் 120x டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ரியல்மி ஜடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 32எம்பி கேமராவுடன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில உள்ளன. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
12ஜிபி/16ஜிபி/ 24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ அறிமுகமாகும். எனவே கேமிங் ஆப்ஸ், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இருந்தபோதிலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5400 எம்எஎச் பேட்டரியுடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று ரியல்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo courtesy: Realme


Click it and Unblock the Notifications