Home
Mobile

இத நேருல பாக்கணும்னு பல பேரோட கனவுங்க.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?

ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு வளைந்த பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவுடன் இந்த புது ரியல்மி போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

 இத நேருல பாக்கணும்னு பல பேரோட கனவுங்க..  100W சார்ஜிங்.. எந்த போன்?

ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

அதேபோல் 50எம்பி ஐஎம்எக்ஸ்966 பிரைமரி சென்சார் (IMX966 primary sensor) + ஐஎம்எக்ஸ்581 அல்ட்ரா வைடு லென்ஸ் (IMX581 ultrawide) + ஐஎம்எக்ஸ்89 3எக்ஸ் டெலிபோட்டோ சென்சார் (IMX890 3x telephoto) என்கிற டர்பிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ரியல்மி ஜடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 32எம்பி கேமராவுடன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில உள்ளன. குறிப்பாக பவர் பட்டன் (power button)மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளன.

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

 இத நேருல பாக்கணும்னு பல பேரோட கனவுங்க..  100W சார்ஜிங்.. எந்த போன்?

ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5400 எம்எஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன்.

வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் உடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரியல்மி போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

photo courtesy: tenaa.com, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 Pro design leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X