தெறிக்கவிடும் ரியல்மி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 7-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனவில் வரவிருக்கும் புதிய ரியல்மி போன் JD.com எனும் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன என்றும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால் மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது ஆன்லைனில் வெளியான இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம். 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
50எம்பி ஐஎம்எக்ஸ்966 பிரைமரி சென்சார் (IMX966 primary sensor) + ஐஎம்எக்ஸ்581 அல்ட்ரா வைடு லென்ஸ் (IMX581 ultrawide) + ஐஎம்எக்ஸ்89 3எக்ஸ் டெலிபோட்டோ சென்சார் (IMX890 3x telephoto) என்கிற டர்பிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் 120x டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ரியல்மி ஜடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 32எம்பி கேமராவுடன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில உள்ளன.
ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே கேமிங் ஆப்ஸ், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
இருந்தபோதிலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்எஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று ரியல்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் உடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் குறிப்பாக இந்த போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் சற்று உயர்வான விலையில் தான் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








