மின்னல் வேகம்னா என்ன தெரியுமா? 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் Realme GT 3!
240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட Realme GT 3 விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.
விரைவில் Realme GT 3
ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 3 என்ற ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க இருக்கிறது. Realme GT 3 ஆனது Realme GT Neo 5 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது.

பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம்
Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது. அதே ஸ்மார்ட்போன் Realme GT 3 என்ற பெயரில் உலக சந்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
உலகளவில் Realme GT 3 வெளியாகும் என தகவல்
Realme GT 3 ஸ்மார்ட்போன் விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படு்ம என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி சீனாவில் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி சேவை
ரியல்மி நிறுவனத்தின் முக்கிய சந்தையில் இந்தியா பிரதான ஒன்று. மேலும் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு வேகமாக அது கிடைக்கும் பகுதிகளில் விரிவடையச் செய்யப்பட்டு வருகிறது. எனவே கண்டிப்பாக நிறுவனம் இந்த 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரியல்மி ஜிடி 3
அதேபோல் ரியல்மி நிறுவனம் நாட்டில் பல ரியல்மி ஜிடி சீரிஸ் போன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி நிறுவனம், Realme GT Neo 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரியல்மி ஜிடி 3 என அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரியல்மி GT 3 இன் பாக்ஸ் ஆன்லைன் மூலம் காணப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என அதில் காட்டப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ் இன் புகைப்படம் @OnLeaks மூலம் வெளியாகி உள்ளது. வரவிருக்கும் ரியல்மி ஜிடி 3 குறித்த கூடுதல் தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
Realme GT 3 அம்சங்கள்
Realme GT Neo 5 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக ரியல்மி ஜிடி 3 இருக்கும் பட்சத்தில் இதன் அம்சத்தை ஓரளவு கணித்துவிடலாம்.

சமீபத்தில், வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9ம் தேதி 2 மணி அளவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த டீசரில் நிறுவனம் அதன் Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அறிமுகம் செய்வதும் உறுதியாகியுள்ளது. இதைத் தவிர வேறெந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
240W மற்றும் 150W என்ற இரண்டு வேரியண்ட் மாடல்கள்
ஆனால், டெக் வட்டார தகவலின் படி, Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் 240W மற்றும் 150W என்று இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைத் தவிர, இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் உடன் 16GB ரேம் கொண்ட மாடலாக வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த டிவைஸ் Android 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் மூலம் இயங்குவதாக TEENA தகவல் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி 3 ஆக இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








