சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரியல்மி, பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.38,999-ஆக உள்ளது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் E4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080பிக்சல்
தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி ஜிடி 2 சாதனம். பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 sensor சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 2. மேலும் பச்சை, வெள்ளை, கருப்பு நிற்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications