ஜனவரி 4: தரமான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
வரும் ஜனவரி 4-ம் தேதி ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் 10+ஆதரவு, 1300 நிட்ஸ் பிரைட்நஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி கேமராவுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications