ஸ்னாப்டிராகன் சிப்செட், 50 எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வரும் டிசம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின்படி, இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 8 Gen1 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் WQHD+ flat OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்லான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

வெளிவந்த தகவலின்படி இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்ஆதரவோடு இந்த அசத்தலான ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் அம்சங்களை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி C25Y
ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம்,20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 420 நிட் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் யுனிசாக் டி 610 எஸ்ஓசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி ஆர் எடிஷன் இன்டர்பேஸ் கொண்டு இயங்குகிறது இந்த அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன். எனவே
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த புதிய ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்புAI பியூட்டி, HDR மோட், பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், எக்ஸ்பெர்ட், ப்ரீ-லோடட் ஃபில்டர்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன். மேலும் ஆக்ஸிலரோமீட்டர்,
ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது
இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி LTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் v5, GPS/A-GPS, மைக்ரோ- USB மற்றும் 3.5mmஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications