தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் RMX3301 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் CNY 4,000 (இந்திய மதிப்பில் ரூ.46,500) விலையில் வெளிவரும் என சீன வலைத்தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ
வெளிவந்த தகவலின்படி ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும். அதேபோல் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக உதவும் என்றுதான் கூறவேண்டும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 108எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2டி
ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு,1300 நிட்ஸ் பிரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி ஜிடி நியோ 2
ரியல்மி ஜிடி நியோ 2 சாதனமானது 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில்,5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ 2. மேலும் விரைவில் வரும் ரியல்மி ஜிடி 2 ப்ரோமாடலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications