2022 முதல் காலாண்டில் வரலாம்., நாளை உறுதிப்படுத்தலாம்: சக்தி வாய்ந்த மலவுவிலை ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி2 ப்ரோ

|

ரியல்மி தனது வரவிருக்கும் ஜிடி தொடரின் சாதனமான ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை இந்த பிராண்ட் அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்திய வெளியீட்டு காலவரிசை ஆன்லைனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 2022 முதல் காலாண்டில் நாட்டில் வரும் என வதந்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் முன்னதாகவே ஐஎம்இஐ தரவுத் தளத்திலும், இஇசி சான்றிதழையும் பெற்றிருக்கிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு காலவரிசை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 91 மொபைல்ஸ் (டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின்) தகவலின்படி ரியல்மி ஜிடி 2 ப்ரோ இந்திய வெளியீடு 2022 முதல் காலாண்டில் நடைபெறும் என கூறப்படுகிறது. அதேபோல் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலக் குறியீட்டில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற மோனிக்கரை டிப்ஸ்டர் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் சீன அறிமுகத்திற்கு பிறகு விரைவில் நாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

ரியல்மி ஜிடி 2 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயத்தில் வெய்போவில் WHYLAB-ன் பதிவில் ஆர்எம்எக்ஸ்3301 மாடல் எண் உடன் ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப் உடன் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு நவம்பர் 30 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

கடந்த வாரம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது AnTuTu பெஞ்ச்மார்க் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பெஞ்ச்மார்க் இயங்குதளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இது வரும் என கூறப்படுகிறது. இமேஜிங் பயன்பாட்டுக்கு என ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டிருக்கும் என வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் புதிய கசிவுத் தகவலின்படி இந்த சாதனம் 50 மெகாபிக்சல் சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

அதேபோல் பிரதான லென்ஸுக்கு 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் ஷூட்டரை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஓஐஎஸ் தொழில்நுட்பம், ஆட்டோஃபோகஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் முன்பக்க அமைப்பு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 32 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமராவை கொண்டிருக்கும் எனவும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ 5ஜி-ன் புதுப்பிப்பு வீதம் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படிகிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ விலை அம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ விலை அம்சங்கள்

Realme GT 2 Pro ஸ்மார்ட்போனை தவிர சியோமி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிற பிராண்டுகளும் 2022-ல் முதன்மை சாதனங்களாக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் சியோமி 12 ஆகிய இரண்டு சாதனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரியல்மி சாதனம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது சிஎன்ஒய் 4000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு ரூ.46,500 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் மலிவான எஸ்டி888 ஆற்றல் கொண்ட சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காமின் முதன்மையான சிப்செட்

குவால்காமின் முதன்மையான சிப்செட்

குவால்காம் அதன் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 செயலியை நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சக்தி வாய்ந்த செயலியை ரியல்மி, சியோமி, ஒப்போ மற்றும் விவோ போன்ற பிராண்டுகளின் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்களில் ரியல்மி ஜிடி2 ப்ரோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்

ரியல்மி ஜிடி2 ப்ரோ இஎன்டி பெஞ்ச்மார்க் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கசிந்த ஸ்க்ரீன்ஷாட் தகவலின்படி, ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது பெஞ்ச்மார்க் இணையதளத்தில் 1025,215 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்பை கொண்டிருக்கும் என வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Realme GT 2 Pro Official Announcement might be on Nov 30: Launch with Snapdragon 8 Gen1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X