Home
Mobile

டிசம்பர் 9: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

வெளிவந்த தகவலின்படி இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தகவலின்படி ரியல்மி ஜிடி 2 ப்ரோ

வெளிவந்த தகவலின்படி ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும். அதேபோல் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக உதவும் என்றுதான் கூறவேண்டும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்லான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில்

இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும்
இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2டி

ரியல்மி ஜிடி நியோ 2டி

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு,1300 நிட்ஸ் பிரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி நியோ 2டி

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 சாதனமானது 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

யல்மி ஜிடி நியோ 2 சாதனம் 5000

மேலும் இந்த ரியல்மி ஜிடி நியோ 2 சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ 2.

Best Mobiles in India

English summary
Realme GT 2 Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X