ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன வெளிவரும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ.!
ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அமசங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே விரைவில் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 50எம்பி பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடல்.


Click it and Unblock the Notifications