Home
Mobile

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த புதிய ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனதம் ரியல்மி ஜிடி மாடலை விட தனித்துவமான வசதிகளுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ரியல்மி ஜிடி 2 மாடலின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2.!

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராபன் 895 பிராசஸர் வசதி உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2.!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2.!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே விரைவில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி ஜிடி 2.!

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme GT 2 Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X