Realme சொல்லிருச்சு வாத்தி கம்மிங்.. எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

|

வாத்தி கம்மிங் என்று கூறியதும் நமது நினைவுக்கு வருவது இளைய தளபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். இப்போது கூட அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் நாம் இங்கு பார்ப்பது தளபதி நடித்த மாஸ்டர் அல்ல ரியல்மி நிறுவனத்தின் மாஸ்டர்.

 ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்

அதாவது ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் (Realme GT 2 Explorer Master Edition) எனும் ஸ்மார்ட்போனை தான் வரும் ஜூலை 12-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 12 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் மாடலின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

தனித்துவமான டிஸ்பிளே

தனித்துவமான டிஸ்பிளே

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் UHD+ AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். இப்போது உள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இதே டிஸ்பிளே வசதி தான் உள்ளது. குறிப்பாக இந்த டிஸ்பிளேவை பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்

அதேசமயம் கேமிங், ஆப்ஸ்களை இயக்கும் போது தனித்துவமான அனுபவத்தை தரும் இந்த AMOLED டிஸ்பிளே. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
1,080x2,412 பிக்சல்ஸ் மற்றும் கார்னிஙகொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?

அட்டகாசமான கேமராக்கள்

அட்டகாசமான கேமராக்கள்

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் மாடல் ஆனது இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்கள் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக இந்த புதிய போன் 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல அசத்தலான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது புதிய ரியல்மி போன்.

இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Airtel பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்: மிஸ் பண்ணிடாதீங்க.!Airtel பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்: மிஸ் பண்ணிடாதீங்க.!

தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே ஆப்களை அருமையாக இயக்க முடியும்.

 ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்

புதிய ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இரண்டு அல்லது மூன்று நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 பேட்டரி வசதி

பேட்டரி வசதி

புதிய ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் போன் ஆனது 4960 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை கண்டிப்பாக இருக்காது.

மேலும் ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் மாடலில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய போனின் எடை 199 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord 2T 5G: மிட்-ரேஞ்ச் விலை பிரிவில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா, சாத்தியமானது எப்படி?OnePlus Nord 2T 5G: மிட்-ரேஞ்ச் விலை பிரிவில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா, சாத்தியமானது எப்படி?

எவ்வளவு விலை இருக்கும்?

எவ்வளவு விலை இருக்கும்?

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தரமாக உள்ளன. எனவே இந்த புதிய ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும்.

அதேபோல் தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் தரமான ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

OnePlus Nord 2T 5G: மிட்-ரேஞ்ச் விலை பிரிவில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா, சாத்தியமானது எப்படி?OnePlus Nord 2T 5G: மிட்-ரேஞ்ச் விலை பிரிவில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா, சாத்தியமானது எப்படி?

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட் வசதிஉள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு இந்த ரியல்மி போன்.

BSNL சைலெண்டாக செய்த வேலை.. இந்த காசுக்கு இவ்வளவு நன்மைகளா? புதுசா 3 திட்டம்BSNL சைலெண்டாக செய்த வேலை.. இந்த காசுக்கு இவ்வளவு நன்மைகளா? புதுசா 3 திட்டம்

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி கேமரா

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி கேமரா

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி போன் ஆனது 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் ஆரம்ப விலைரூ.23,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT 2 Explorer Master Edition with 50 Mega Pixel Camera Launching in China on July 12: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X