200 கிராம்.. 8.5 மிமீ ஸ்லிம் டிசைன்.. 10000mAh பேட்டரி உடன் புது Realme போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ரியல்மி (Realme) நிறுவனம் பல்வேறு சந்தைகளில் அதன் ரியல்மி ஜிடி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ள பணிகளிலும், அவைகளை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்து. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி சீரீஸின் கீழ் ஒரு புதிய கான்செப்ட் போன் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை (ஒரு பெரிய அல்லது நன்கு அறியப்பட்ட பிராண்டால்) அறிமுகம் செய்யப்பட்ட மிகப்பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் அது ஹானர் பவர் ஸ்மார்ட்போன் தான் . இது கடந்த மாதம் 8000mAh பேட்டரியுடன் அறிமுகமானது. தற்போது ரியல்மி நிறுவனம் இதைவிட பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வெளிப்படுத்தவுள்ளது.

ரியல்மி நிறுவனம் வெளியிட்ட கான்செப்ட் போன் ஆனது 10,000mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. மேலே உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ரியல்மி நிறுவனம் "ஜிடி 10000mAh" என்று பெயரிடப்பட்ட ஒரு கான்செப்ட் போனை (Realme GT 10000mAh Concept Phone) காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் "10,000mAh" என்கிற பெரிய, ஸ்டைலிஷ் ஆன டைப்போகிராஃபியை காண முடிகிறது
மேலும் "பவர் தட் நெவர் ஸ்டாப்ஸ்" என்ற டேக்லைனையும் கொண்டுள்ளது. மேலும் வெளியான புகைப்படத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. ரியல்மி பிராண்டின் படி, இந்த 10,000mAh கான்செப்ட் போன் ஆனது ஒரு அல்ட்ரா-ஹை சிலிக்கான்-கன்டென்ட் அனோட் பேட்டரியை கொண்டுள்ளது.
இது ஸ்மார்ட்போன் துறையில் மிக உயர்ந்த 10% சிலிக்கான் விகிதத்தையும் 887Wh/L ஆற்றல் அடர்த்தியையும் வழங்குகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் அளவை அதிகரிக்காமலேயே பெரிய பேட்டரியை பேக் செய்ய முடியும். இதன் விளைவாக ரியல்மி நிறுவனத்தின் இந்த கான்செப்ட் போன் ஆனது அளவீட்டில் வெறும் 8.5 மிமீ மட்டுமே இருக்கும் மற்றும் எடையில் 200 கிராம் இருக்கும்.
இப்படி ஒரு பெரிய 10,000mAh பேட்டரியை பொருத்த, Realme நிறுவனம் மினி டயமண்ட் ஆர்கிடெக்சர் (Mini Diamond Architecture) என்ற புதிய உள் அமைப்பை உருவாக்கி உள்ளது. இது உலகின் மிகக் குறுகிய ஆண்ட்ராய்டு மெயின்போர்டை 23.4மிமீ இல் செயல்படுத்தி 60 க்கும் மேற்பட்ட உலகளாவிய காப்புரிமைகளை பெற்றுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ரியல்மி நிறுவனம் இந்த மாத இறுதியில் அதன் ரியல்மி ஜிடி 7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை உலகளாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வில் ரியல்மி ஜிடி 10,000mAh கான்செப்ட் போன் காட்சிப்படுத்தப்படலாம். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த கான்செப்ட் போன் ஆனது வணிக ரீதியாக விற்பனைக்கு வராமல் போகலாம் என்றாலும், ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் பேட்டரி திறனின் புதிய எல்லைகளை தொட்டு பார்ப்பதில் இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்!
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சோனி IMX896 ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் -OIS)
- 8 மெகாபிக்சல் 112-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- கிராஃபீன் பூசப்பட்ட ஃபைபர் கிளாஸ் பின்புற பேனல் மேம்பட்ட வெப்ப கடத்துத்திறனை வழங்குவதாக கூறப்படுகிறது
- கூடவே 6 மணிநேரம் ஸ்டேபிள் 120 FPS கேம்பிளேவை gவழங்கும் என்றும் கூறப்படுகிறது
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








