திட்டமே வேற- மிக சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனை வெளியிடும் ரியல்மி: எவ்வளவு., எப்போது அறிமுகம்?

|

குவால்காம் அதன் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 செயலியை நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சக்தி வாய்ந்த செயலியை ரியல்மி, சியோமி, ஒப்போ மற்றும் விவோ போன்ற பிராண்டுகளின் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்களில் ரியல்மி ஜிடி2 ப்ரோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி2 ப்ரோ

ரியல்மி ஜிடி2 ப்ரோ

ரியல்மி ஜிடி2 ப்ரோ இஎன்டி பெஞ்ச்மார்க் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கசிந்த ஸ்க்ரீன்ஷாட் தகவலின்படி, ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது பெஞ்ச்மார்க் இணையதளத்தில் 1025,215 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்பை கொண்டிருக்கும் என வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயங்கும் பிற ஸ்மார்ட்போன்களை விட ரியல்மி ஜிடி 2 ப்ரோ குறைந்தது 15 சதவீதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 மட்டுமின்றி மீடியாடெக் டைமன்ஷென் 9900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டதோடு பெயர் தெரிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெஞ்ச்மார்க்கில் பெற்றிருக்கிறது.

மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 ஆனது மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி-ஐ விட சற்று முன்னோக்கி இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டு சிப்செட்களுக்கு இடையிலான செயல்திறனில் இருக்கும் வேறுபாடு மிகக் குறைவாக இருந்தாலும் செயல்திறனில் சிறந்த மாறுபாடு இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட் மற்றும் மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட்

வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட்டில் இயங்கும் 15 சதவீதத்திற்கும் அதிகமான சாதனங்கள் மேம்பட்ட செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேசமயத்தில் வெப்பத்தின் அடிப்படையில் இது பயனுள்ளதாக இருக்கிறதா என்ற கேள்வி மறுபுறம் இருக்கிறது. குவால்காம் சிப்செட்கள் ஸ்னாப்டிராகன் 888 மற்றும் ஸ்னாப்டிராகன் 888+ ஆகியவை ஹீட்டிங் மற்றும் த்ரோட்லிங் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டிவ் கூலிங் தீர்வு

ஆக்டிவ் கூலிங் தீர்வு

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 ஆனது டிஎஸ்எம்சியின் 4என்எம் ஃபேப்ரிக்கேஷனை அடிப்படையாகக் கொண்டது, இது பரிமாணம் 9000 எஸ்ஓசியைப் போன்றது. ஆக்டிவ் கூலிங் தீர்வை பயன்படுத்தும் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் போல் இன்றி பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் செயலற்ற குளிரூட்டல்களையே பயன்படுத்துகின்றன. கசிந்த தகவலின்படி ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 ஆனது தற்போதையை காலத்திற்கு ஏற்ப அதாவது மொபைல் கேம்களை அதிக புதுப்பிப்பு வீதத்தில் அணுக உதவுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனில் நேரடி ரே டிராக்கிங் பயன்பாட்டை இது ஆதரிக்கிறது.

அதிக மதிப்பெண் பெற்ற ஸ்மார்ட்போன்

அதிக மதிப்பெண் பெற்ற ஸ்மார்ட்போன்

அதேபோல் தற்போது வரை என்ட் இணையதளத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 858734 மதிப்பெண்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் பொருத்தப்படும் போது மாற்றம் இருப்பதி உறுதி ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே 50 மெகாபிக்சல் பிரதான கேமரா முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இது 125 வாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 உடன் வரும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதி

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே விரைவில் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 50எம்பி பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

6.51-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி

6.51-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Going Launch its Realme GT 2 Pro as Most Powerful Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X