மாஸ்டர் தி பிளாஸ்டர்: ரியல்மி அறிமுகம் செய்யும் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்- ஆகஸ்ட் 18 உறுதி!

|

ரியல்மி ஜிடி இந்தியாவில் ஜிடி தொடரில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு சாதனங்களுடன் விரிவாக்கம்

இரண்டு சாதனங்களுடன் விரிவாக்கம்

பிராண்ட் அதன் மலிவு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை வேறு இரண்டு சாதனங்களுடன் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் ரியல்மி தங்களது சாதனத்தை அறிமுகம் செய்து அதன் சந்தையை விரிவாக்க உள்ளது. ஜிடி தொடர் சாதனங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட தினத்தில் ரியல்மி ஜிடி 5ஜி, ரியல்மி ஜிடி மாஸ்டர் சீரிஸ் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான புதிய ரியல்மி ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்?

இந்தியாவுக்கான புதிய ரியல்மி ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்?

சமீபத்தில் நடைபெற்ற AskMadhav எனப்படும் யூடியூப் தொடரில், ரியல்மி இந்தியா தலைவர் புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை உறுதிப்படுத்தினர். இந்த பிராண்ட் ரியல்மி ஜிடி 5ஜி, ரியல்மி ஜிடி மாஸ்டர் மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை நாட்டில் அதன் ப்ரீமியம் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் சேர்க்க உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகஸ்ட் 18 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று மாடல்கள் வெளியீடு

மூன்று மாடல்கள் வெளியீடு

இந்த நிறுவனம் முன்னதாகவே இந்தியாவிற்கு வெளியே மூன்று மாடல்களை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு உள்ளடக்கிய ஜிடி மாஸ்டர் தொடரை சமீபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிமுகம் செய்தது. நிறுவனம் தனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையை இந்தியாவில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. நிறுவனம் உயர்நிலை அம்சங்களோடு பல மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

ப்ரீமியம் பிரிவில் பெரும் பங்கு வகிக்கும்

ப்ரீமியம் பிரிவில் பெரும் பங்கு வகிக்கும்

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் அனைத்து மூன்று மாடல்களும் குறிப்பாக ரியல்மி ஜிடி மாஸ்டர் தொடர் ப்ரீமியம் வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்பை மற்றும் மேற்புற பூச்சு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தொடர்கள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ப்ரீமியம் ரக பிரிவில் ரியல்மியும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.

ரியல்மி 8 சீரிஸ் வெளியீட்டை எதிர்பார்க்கலாமா?

ரியல்மி 8 சீரிஸ் வெளியீட்டை எதிர்பார்க்கலாமா?

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதால் மிலவு விலை ஸ்மார்ட்போனில் நிறுவனம் கவனம் செலுத்தாமல் போய்விடும் என்பது இல்லை. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய பயனர்களுக்காக இரண்டு புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக உறுதிப்படுத்தினார். இந்த சாதனம் விரைவில் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 அன்று ரியல்மி ஜிடி 5ஜி

ஆகஸ்ட் 18 அன்று ரியல்மி ஜிடி 5ஜி

ரியல்மி 8ஐ மற்றும் ரியல்மி 8எஸ் விரைவில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவலை மாதவ் ஷேத் AskMadhav யூடியூப் தொடரில் உறுதிப்படுத்தியுள்ளார். சரியான வெளியீட்டு தேதியை இன்னும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. நிறுவனம் ஆகஸ்ட் 18 அன்று ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி மாஸ்டர் எடிஷன் தொடர் அறிமுகமாகும் என கூறப்படும் நிலையில் அதே தினத்தில் ரியல்மி 8ஐ மற்றும் ரியல்மி 8 எஸ் அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் பயனர்களிடையே உள்ளது என்றாலும் அது கேள்விதான் என கூறப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Going Launch its Master Edition Smartphone on August 18

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X