Home
Mobile

Diwali Sale 2024: அடிமட்ட விலைக்கு Realme போன்கள்.. விற்பனை சூடு பிடிக்குது.. மொத்த லிஸ்ட் இதோ!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி இந்தியா நிறுவனம், ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையை (Realme Festive Days Sale) களமிறக்கி இருக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட் ரியல்மி பி2, ரியல்மி 12, ரியல்மி 13, ரியல்மி ஜிடி6 போன்ற பல்வேறு சீரிஸ்களுக்கு கிடைக்கிறது. இந்த பண்டிகை விற்பனை செப்டம்பர் 17ஆம் தேதி முதலே தொடங்கிவிட்டது. இப்போது, எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3 மாதங்களுக்கான நோ-காஸ் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

Diwali Sale 2024: அடிமட்ட விலைக்கு Realme போன்கள்.. விற்பனை சூடு!

இதற்கு ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro+ 5G): இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999 ஆக இருக்கிறது. ரூ.6000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro+ 5G): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது, தீபாவளி சலுகையில் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட், ரூ.6000 மதிப்பில் சூப்பர்காய்ன்ஸ் மற்றும் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட், ரூ.6000 மதிப்பில் சூப்பர்காய்ன்ஸ் மற்றும் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது. அதேபோல 512 ஜிபி மாடலுக்கும் கூப்பன் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கிறது.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.5000 மதிப்பில் சூப்பர்கான்ய்ஸ் பெற்று கொள்ளலாம்.

மேலும், ரூ.28,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கும், ரூ.31,999 விலை கொண்ட 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட், ரூ.5000 சூப்பர்காய்ன்ஸ் மற்றும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை பெறலாம்.

ரியல்மி ஜிடி 6 (Realme GT 6): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.40,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.4000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.4000 சூப்பர்காய்ன்ஸ் கிடைக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கான நோகாஸ்ட் ஈஎம்ஐ சலுகையை பெற்று கொள்ளலாம்.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 42,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999ஆகவும் இருக்கிறது. இவற்றுக்கும் ரூ.4000 கூப்பன் டிஸ்கவுண்ட், ரூ.4000 சூப்பர்காய்ன்ஸ் மற்றும் 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Diwali Sale 2024 Realme P2 Realme 12 Realme 13 Realme GT 6 Smartphone Discounts List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X