Home
Mobile

Realme Days sale: ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் Realme Days sale என்ற தலைப்பில் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது இந்த நிறுவனம்.

ப்ரல் 21-ம் தேதி தொடங்கி

அதாவது (இன்று) ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 24-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ரியல்மி வலைத்தளத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட தள்ளுபடிகள் தவிர, ரியல் நிறுவனம் Freecharge வழியிலான பரிவர்த்தனைக்கு ரூ.75 கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 55-இன்ச் ஸ்மார்ட் டிவி  SLED 4K

ரியல்மி 55-இன்ச் ஸ்மார்ட் டிவி SLED 4K

இந்த ரியல்மி 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் முந்தைய விலை ரூ.43,999-ஆக இருந்தது, ஆனால் தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.40,999-க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 4கே வசதி கொண்ட இந்த ஆண்ட்ராய்டு டிவி டால்பி ஆடியோ சவுண்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன்

ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன்

இந்த ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் தள்ளுபடி கிடைக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 7 ஸமார்ட்போன்

ரியல்மி 7 ஸமார்ட்போன்

இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி 7 ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும். அதாவது பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி 95 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 7 ப்ரோ

ரியல்மி 7 ப்ரோ

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 65 வாட் பாஸ் சார்ஜிங் ஆதரவு, 64எம்பி சோனி கேமரா வசதி,AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி நர்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி நர்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்

தற்போது ரியல்மி நர்சோ 20 ப்ரோ மாடல் ரூ.12,999-விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த சாதனம் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி ரியர் கேமரா வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரியல்மி 6 ப்ரோ

ரியல்மி 6 ப்ரோ

இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999-விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது ரியல்மி எக்ஸ் 3 ஆனது ரூ.21,999 க்கும், ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ரூ.22,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

அசத்தலான ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகைகள்

அசத்தலான ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகைகள்

ரியல்மி எக்ஸ் 7 சாதனத்தின் மீது ரூ.1000 ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகையை பெறமுடியும். இதன் மூலம் இந்த ரியல்மி எக்ஸ் 7 மாடலை ரூ.18,999-விலையில் வாங்கலாம். அதேபோல் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடலுக்கு ரூ.2,000 ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.27,999-விலையில் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடலை வாங்கலாம். கடைசியாக ரியல்மி நர்சோ 30 ப்ரோ சாதனத்தின் மீது ரூ.1000 ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. எனவே இந்த ரியல்மி நர்சோ 30 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Realme Days sale from April 21: Best Offers on Smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X