ரியல்மி 2ப்ரோ, ரியல்மி 3, சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ரியல்மி நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், பிளிப்கார்ட் வலைதளத்தில் ரியல்மி 2ப்ரோ, ரியல்மி 3, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு
அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சலுகை வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2ப்ரோ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் ரியல்மி3 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரியல்மி5 சாதனம் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோரிகளிலும் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ரியல்மி 2 ப்ரோ டிஸ்பிளே
ரியல்மி 2 ப்ரோ 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 2 ப்ரோ கேமரா
16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 3 டிஸ்பிளே:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த சாதனம்.

ரியல்மி 3 சிப்செட்
ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ் அன்லாக் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications