ரூ.7000 - ரூ.27000 பட்ஜெட்வரை.. 7 Realme போன்கள் மீது பெரிய டிஸ்கவுண்ட்.. Flipkart-ல் விட்றாதீங்க!
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart), அதன் தளத்தில் ரியல்மி டேஸ் (Realme Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்து உள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை உள்ளடக்கிய விற்பனை ஆகும்.
ஜூலை 25 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ்.. வெவ்வேறு சீரீஸ் மற்றும் விலைப்பிரிவின் கீழ்.. மொத்தம் 7 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி / ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற பட்டியல் இதோ:

1. ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
2. ரியல்மி பி3எக்ஸ் (Realme P3x): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.11,699 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
3. ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
4. ரியல்மி சி71 (Realme C71): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
5. ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
6. ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
7. ரியல்மி ஜிடி 6 (Realme GT 6): இது ரியல்மி டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.27,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 7 ரியல்மி ஸ்மார்ட்போன்களின் ஆபர் விலைகளும் நேரடி தள்ளுபடி அல்லது விலைக்குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ஆகியவைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
ஒருவேளை உங்களுக்கு பழைய மாடல்களை ஆபர் விலையில் வாங்க விருப்பம் இல்லை என்றால் அல்லது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களை தேடுகிறீர்கள் என்றால் இன்று (ஜூலை 23) இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம்
ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டாகோர் யுனிசாக் டி7250 சிப்செட், 16 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம், வயர்டு மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங், 6300mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.700 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அப்ஸிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்ட் (Beach Gold) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 28 அன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேல் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும். அதன் பின்னர் ஜூலை 31 அன்று மதியம் 12 மணி முதல் திறந்த விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








