Home
Mobile

அதிவேக சார்ஜிங் அம்சத்தோடு அறிமுகமாகும் ரியல்மே 7, ரியல்மே 7 ப்ரோ: சிறப்பம்சங்கள்!

ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ செப்டம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் தரப்பில் உறுதிப்பட தெரிவித்துள்ளது. ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ செப்டம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஐ ஆம் பேக் நான் திரும்ப வந்துட்டேன் என்ற பேக்ரவுண்ட் இருந்தது.

இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாக்கும்

இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாக்கும்

மேலும் அந்த டுவிட்டில் கடந்த சில அறிமுக நிகழ்வுகளில் தான் கலந்து கொள்ளாததற்கான் காரணத்தை தெரிவித்தார். அதில் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில்தான் ஈடுபட்டு இருந்ததாக குறிப்பிட்டார்.

ஹேஸ்டேக் பதிவீடு

ஹேஸ்டேக் பதிவீடு

அந்த டுவிட்டர் பதிவில் #BuildingTheFaster7 என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டிருந்தார். அதில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை குறித்து இந்த ஹேஸ்டேக் பதிவிட்டார்.

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி தனது சமீபத்திய தொடரான ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்து நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ செப்டம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

65 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

65 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என்பதை டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் என்பது அதிவேக சார்ஜிங் அம்சமாகும். இந்த மாடல்கள் பிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகியவற்றின் கீழ் விற்பனைக்கு கிடைக்கும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

64 மெகாபிக்சல் குவாட் கேமரா

64 மெகாபிக்சல் குவாட் கேமரா

ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ மாடலானது 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்போடு இருக்கும். ரியல்மி 7 ப்ரோ இந்தியாவில் அதிவேக சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். அதிவேக சார்ஜிங் என்பது 34 நிமிடங்களில் 0 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். பேட்டரி பேக்-அப் விவரங்கள் குறித்து பார்க்கையில் 3.5 மணிநேர அழைப்பு, 2.5 மணிநேர திரைப்படம், 13.2 மணிநேர இசை உள்ளிட்டவைகள் வழங்கும்.

முன்பதிவு விவரங்கள்

முன்பதிவு விவரங்கள்

ரியல்மி 7 தொடர் முன்பதிவு குறித்து சில விவரங்கள் வெளியாகியுள்ளது. ரூ.1000 செலுத்தி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் போது 100 சதவீதம் மாடலை வாங்கலாம் என தெரிகிறது. மீதத்தொகையை செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 15 வரை செலுத்தலாம் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Realme Confirmed its Realme 7 and Realme 7 pro Launching in India Next Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X