Home
Mobile

சினிமா எஃபெக்ட்.. 120X பெரிஸ்கோப்.. இதான் உண்மையான Best Camera Phone.. ஜன.29 அறிமுகம்! என்ன மாடல்?

ஒரு சில வருடங்களில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி (Realme), ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளரான கிளாடியோ மிராண்டா (Claudio Miranda) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. எதற்காக இந்த கூட்டணி? இதனால் வரப்போகும் ரியல்மி ஸ்மார்ட்பபோன்களுக்கு என்ன நன்மை?

லைஃப் ஆஃப் பை (Life of Pi) திரைப்படமானது சினிமா உலகில் இன்னமும் ஒரு விதிவிலக்கான படைப்பாகும். அப்படத்தில் பணியாற்றிய கிளாடியோ மிராண்டாவிற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மதிப்புமிக்க அகாடமி விருது கிடைத்தது. சுருக்கமாக இவர் சினிமா துறையில் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு வல்லுநர் ஆவார்!

இதான் உண்மையான Best Camera Phone.. ஜன.29 அறிமுகம்! என்ன மாடல்?

அப்படிப்பட்ட கிளாடியோ மிராண்டா உடனான ரியல்மி நிறுவனத்தின் கூட்டணிக்கு என்ன காரணம்? ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜிக்கான மூன்று நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மூவி ஃபில்டர்களை அறிமுகப்படுத்துவதே ஆகும்: அவைகள் - ஜர்னி (Journey), மெமரி (Memory) மற்றும் மேவெரிக் (Maverick) ஆகும்.

கிளாடியோ மிராண்டாவின் அசாதாரண ஒளிப்பதிவினால் ஈர்க்கப்பட்ட இந்த பில்டர்கள், கனவு போன்ற சூழல், அமைதியான மற்றும் திறமையான நடத்தை மற்றும் ஆழ்ந்த சினிமா உணர்வை கொண்ட ரெட்ரோ பாணியை தூண்டுவதை நோக்கமாக கொண்டுள்ளன. ஒவ்வொரு பில்டரும் "லைஃப் ஆஃப் பை," "தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்," மற்றும் "டாப் கன்: மேவரிக்" போன்ற திரைப்படங்களின் விஷுவல் எசென்ஸை பிரதிபலிக்கும் வகையில் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதான் உண்மையான Best Camera Phone.. ஜன.29 அறிமுகம்! என்ன மாடல்?

கூடுதலாக, ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜி ஆனது, 2.39:1 மூவி-வைட் ஃபார்மேட் விகிதத்தில் அழகான தருணங்களையும் படம்பிடிக்க உதவும். இது ஃபாஸ்ட்-க்ராப்பிங் தேவைகளை நீக்குகிறது. இந்த தனித்துவமான அம்சம் புகைப்படக்கலை ஆர்வலர்கள், இசையமைப்பிற்கான கிளாசிக் திரைப்பட வடிவமைப்பை தழுவி, சினிமா பாணியிலான பிரமிக்க வைக்கும் போர்ட்ரெயிட்களை கைப்பற்ற உதவுகிறது.

போட்டோகிராஃபி அனுபவத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று, ரியல்மி 12 ப்ரோ சீரீஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, போர்ட்ரெய்ட் போட்டோ அனுபவத்தை மேம்படுத்தும் புரட்சிகரமான சினிமாடிக் பொக்கே அல்காரிதத்தை கொண்டுள்ளது. இந்த அல்காரிதம் இயற்கையான மற்றும் கடினமான பிளர்ரிங்கை வழங்குகிறது.

இதான் உண்மையான Best Camera Phone.. ஜன.29 அறிமுகம்! என்ன மாடல்?

மேலும் வசீகரிக்கும் லைட் ஸ்பாட்ஸ் உடன், பிரமிக்க வைக்கும் போர்ட்ரெயிட்களை உருவாக்குகிறது. அபெர்க்ஷர் அட்ஜெஸ்ட்மென்ட்ஸின் ரியல்டைம் ப்ரீவியூவானது பயனர்களுக்கு சரியான போர்ட்ரெய்ட் பிளர் எபெக்ட்டை தேர்வுசெய்ய உதவுகிறது, அதே சமயம் ஹேர்லைன்-லெவல் கீயிங் எஃபெக்ட்ஸ் ஆனது பேக்கிரவுண்டில் முக்கியமானதாகவும் கூர்மையாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறது.

ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜி ஆனது இந்த பிரிவில் வலுவான பெரிஸ்கோப் டெலிஃபோட்டோவையும் கொண்டுள்ளது. இது 120எக்ஸ் வரையிலாக நம்பமுடியாத ஜூமிங் திறனை வழங்குகிறது. அதன் விதிவிலக்கான வன்பொருள் மற்றும் மென்பொருளுடன், ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜி ஆனது அதன் விலை வரம்பில் மிகவும் சக்திவாய்ந்த போர்ட்ரெய்ட் போனாக உருமாறுகிறது.

இதான் உண்மையான Best Camera Phone.. ஜன.29 அறிமுகம்! என்ன மாடல்?

ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜி-யின் உலகளாவிய அறிமுகம் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றனர். என்ன விலைக்கு வரும்? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல்கள் வெளியானால் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

ரியல்மி நிறுவனம் பற்றி: ரியல்மி ஒரு தொழில்நுட்ப பிராண்டாகும். மே 4, 2018 அன்று நிறுவப்பட்ட இந்த பிராண்ட் தற்போது இந்தியாவில் 70 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு விலைப் பிரிவிலும் சிறந்த தொழில்நுட்பத் தயாரிப்புகளை வழங்குவதற்கு பெயர்பெற்ற இந்நிறுவனம் ஐடிசி க்யூ2 2022 அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் 24% வலுவான YoY வளர்ச்சியுடன், இரண்டாவது முறையாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது. மேலதிக விவரங்களுக்கு www.realme.com/in/ வலைத்தளத்திற்கு செல்லவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme collaborates with Oscar Winning Expert for Realme 12 Pro Series 5G Launching On Jan 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X