ஆளுக்கு 2 வாங்குறாங்க.. ரூ.9,999 பட்ஜெட்டுக்கு 108MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எப்படி முடியுது?
ரூ.9,999 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 2டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி கொண்டு வெளியாகிய ரியல்மி சி53 போனானது, விற்பனையில் சக்கைப்போடுபோட்டு வருகிறது. இவ்வளவு மலிவான விலையில், 108 எம்பி கேமரா எப்படி கொடுக்க முடிந்தது என்பது குறித்த விவரங்கள் இதோ.
ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி சி53 (Realme C53) போன் ரூ.9,999 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக 108 எம்பி கேமரா கொண்ட போன்களுக்கு மிட்-ரேன்ஞ் தரத்தில் சிப்செட் கொடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் கொடுத்தால், அந்த போனின் விலை ரூ.20,000க்கும் மேல் சென்றுவிடும்.

இதனால் ரியல்மி நிறுவனம், மலிவான விலையில் 108 எம்பி கேமராவை கொடுக்க ஏதுவாக யுசோக் என்னும் செமிகண்டக்டர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, யுனிசோக் டி612 என்னும் மலிவு விலை சிப்செட்டை ரியல்மி சி53 போனில் கொடுக்க திட்டமிட்டது. அதன்படியே அந்த போன் விற்பனைக்கும் வந்துவிட்டது.
இந்த யுனிசோக் டி612 சிப்செட் எவ்வாறு பயன்படும்? இந்த 108 எம்பி கேமராவில் எடுக்கப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் ராவ் டேட்டாக்களை இந்த சிப்செட் பகுப்பாய்வு செய்கிறது. அந்த போட்டோக்கள், வீடியோக்களின் பிக்சல்கள் குறையாமலும், அதே நேரத்தில் அளவு அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்கிறது.
அதோபோல போட்டோக்களை எடுத்த அடுத்த நொடியே தாமதப்படுத்தாமல் காண்பிப்பது, நாய்ஸ்களை குறைப்பது, ஆப்டிகல் ஜூமிங்கின்போது பிக்சல்கள் உடையாமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த சிப்செட் உதவியாக இருக்கிறது. இப்போது, இந்த போனின் முழு அம்சங்கள் விலை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி சி53 போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 2 டிபி வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. அதன்படி டூயல் நானோ சிம் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வரும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் அம்சங்கள் இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








