Home
Mobile

விட்றாதீங்க.. Realme Christmas Sale 2023 ஆரம்பம்.. 5 ரியல்மி Smartphone-கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம். ஏனென்றால் ரியல்மி நிறுவனம் கிறிஸ்துமஸ் சேல் 2023 (Realme Christmas Sale 2023) என்கிற சிறப்பு விற்பனையை தொடங்கி, பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது

ரியல்மியின் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் விற்பனை எப்போது முடிவடையும்? இந்த சிறப்பு விற்பனையின் கீழ் என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன? இந்த சலுகைகள் எந்தெந்த வலைத்தளங்கள் (Websites) வழியாக அணுக கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Realme Christmas Sale 2023: 5 ரியல்மி போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

ரியல்மி கிறிஸ்துமஸ் சேல் 2023 எப்போது முடிவடையும்? கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கிய ரியல்மியின் இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 26 வரை தொடரும். இதன்கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன் சலுகைகளை ரியல்மி.காம் (Realme.com) மற்றும் அமேசான்.இன் (Amazon.in) வலைத்தளங்கள் வழியாக அணுகலாம்.

01. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G): ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மீது ரூ.2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Realme Christmas Sale 2023: 5 ரியல்மி போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

02. ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G): ரியல்மி 11 ப்ரோ 5ஜி-யின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மீதும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் மீது எந்த தள்ளுபடியும் இல்லை. இது ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

03. ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55): ரியல்மி நார்சோ என்55 ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஆப்ஷன் மீது ரூ.3000 தள்ளுபடியும், ரூ.500 கூப்பன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் மீது எந்த தள்ளுபடியும் இல்லை. இது ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Realme Christmas Sale 2023: 5 ரியல்மி போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

04. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme narzo 60 5G): ரியல்மி நார்சோ 60 5ஜி-யின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மீது ரூ.2500 கூப்பன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

05. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme narzo 60 Pro 5G): ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி-யின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மீது ரூ.3000 கூப்பன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற ஸ்மார்ட்போன் சலுகைகள்: மிகவும் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) மீது ரூ.500 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரியல்மி சி51 (Realme C51) மீது ரூ.1000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இதை ரூ.8,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Christmas Sale 2023 Up to Rs 3000 Discounts on Smartphones Till Dec 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X