Home
Mobile

பட்டையை கிளப்பும் புது Realme போன்.. பட்ஜெட் பிரிவில் 5ஜி, 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங், IP69 ரேட்டிங்!

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை சீரீஸ் ஆன ரியல்மி சி சீரிஸின் (Realme C Series) கீழ்.. 7000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் ஆகிய முரட்டு அம்சங்களுடன் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

நாம் இங்கே பேசுவது - ரியல்மி சி85 ப்ரோ 5ஜி (Realme C85 Pro 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்துடன் ரியல்மி நிறுவனமானது பட்ஜெட் விலை பிரிவில் பேட்டரி லைஃப்பின் வரம்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது போல் தெரிகிறது.

பட்டையை கிளப்பும் புது Realme போன்.. பட்ஜெட் பிரிவில் 5ஜி, 7000mAh!

ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று ரியில்மி கூறுகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் தடிமன் அல்லது எடை குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை வெளியிடப்பட்ட 7000mAh+ சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் கொண்ட எந்த ஸ்மார்ட்போனுமே தடிமனாகவோ அல்லது கனமாகவோ இல்லை. எனவே பயனர்கள் ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதையே (நல்ல இன்-ஹேண்ட் எக்ஸ்பீரியன்ஸை) எதிர்பார்க்கலாம்.

பேட்டரி மட்டுமின்றி ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நீடித்து உழைக்கும் தன்மையையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது ஐபி69 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சான்றிதழை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அதன் விலை வரம்பில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை விட ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஆனது நல்ல தூசி, நீர் மற்றும் ட்ராப் எதிர்ப்புத்திறனை வழங்கும்

மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் நேரடி சூரிய ஒளிக்கு போதுமான பிரகாசமான 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை 5ஜி ஆதரவு, 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை பொறுத்தவரை இது ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது இந்தியா மற்றும் வியட்நாம் சந்தைகளை இலக்காக கொண்ட ஒரு பிக் பேட்டரி ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கடைசியாக ரியல்மி சி சீரீஸின் கீழ் இந்திய சந்தையில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இதன் விலை ரூ.12,999 ஆகும்.

ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- 6.67-இன்ச் FHD+ டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 180Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 625 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்

- 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்
- 12GB வரை விர்ச்சுவல் ரேம்
- 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.8 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேலக்ஸிகோர் GC32E2 ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஏஐ அடிப்படையிலான இமேஜிங் மற்றும் எடிட்டிங் டூல்கள்
- ஏஐ சிக்னல் பூஸ்ட் அம்சம்

- 6000mAh பேட்டரி
- 45W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- MIL-STD 810H இராணுவ-தர அதிர்ச்சி எதிர்ப்பு சான்றிதழ்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 165.70×76.22×7.94மிமீ
- எடையில் சுமார் 190 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C85 Pro 5G With 7000mAh Battery Launching Soon in India Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X