ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் அதிருது.. பட்ஜெட் ரேட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP69 ப்ரோ ரேட்டிங்.. மாடல்?
நம்ப முடியாத பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஐபி69 ப்ரோ வாட்டர் ரேட்டிங் கொண்ட மாடலாக ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்களை ரியல்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் 28ஆம் தேதியில் ரியல்மி சி85 சீரிஸ் (Realme C85 Series) வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் ரியல்மி சி85 5ஜி மற்றும் ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்களை எதிர்பார்க்கலாம். இதில் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்மாக உறுதியாகி இருக்கின்றன. அதேபோல டிசைன் மற்றும் கலர் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன.

ரியல்மி சி85 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே வருகிறது. 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான 7000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
ஐபி69 ப்ரோ (IP69 Pro) ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. மேலும், 36 வகையான லிக்விட்களில் இருந்து புரொடெக்சன் கொடுக்கிறது. இதில் ஹாட் வாட்டர், கோல்ட் வாட்டர் உள்ளிட்டவை அடங்குகிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழை இந்த ரியல்மி சி85 ஆனது கொடுக்கிறது.
50 மெகாபிக்சல் மெயின் கேமராவும் ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) பீச்சரும் அந்த மாடலில் கிடைக்கிறது. கிரீன் மற்றும் பர்பிள் கலர் உள்ளது. இந்த பீச்சர்களை மட்டுமே ரியல்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், ரியல்மி சி85 5ஜி ஆனது ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், முழு அம்சங்களையும், பட்ஜெட் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
குளோபல் வெர்ஷனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி 6என்எம் (MediaTek Dimensity 6300 5G 6nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரியுடன் 16 ஜிபிக்கான டைனாமிக் ரேம் இணைக்கப்பட்டிருக்கிறது. 6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 சென்சாருடன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
8 மெகாபிக்சல் செல்பீ கிடைக்கிறது. இந்த ரியல்மி சி85 5ஜி ஆனது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 8.38 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொண்டுள்ளது. ஹை-ரெஸ் சப்போர்ட் கொண்ட சிங்கிள் டவுன்வார்டு ஸ்பீக்கர் (Downward-Firing Speaker) கிடைக்கிறது.
குளோபல் மார்கெட்டில் இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,886ஆக இருக்கிறது. இந்திய மார்கெட்டில் இதே பட்ஜெட்டில் வெளியாகும். அதிலும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.20,000 பட்ஜெட்டிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








