Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி85 5ஜி (realme C85 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி85 5ஜி அம்சங்கள் (Realme C85 5G Specifications): ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில். ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

அதேபோல் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் இதில் உள்ளது.

இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் மூலம் 1080பிக்சல் வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழை பெற்றுள்ளது ரியல்மி சி85 5ஜி போன்.

குறிப்பாக அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker), 400% ஆட்டோ வால்யூம் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 215 கிராம் ஆகும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி கொண்டுள்ளது இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, க்ளோனாஸ்,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme C85 5G phone available at 6 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X