அறிமுகமானது புதிய Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி சி85 5ஜி அம்சங்கள் (Realme C85 5G Specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அனைத்து அனைத்து கேமிங் ஆப்களையும் இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் 7000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, வைஃபை 5இ புளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, டூயல் சிம், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதுவும் IP69 Pro தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த ரியல்மி போனில் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 215 கிராம் ஆகும்.
தற்போது ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் விலை $290 (இந்திய மதிப்பில் ரூ.25,746)-ஆக உள்ளது. பேரட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








