சொன்ன மாதிரியே கம்மி விலையில் களத்துல இறக்கிட்டாங்க! IP69K ரேட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. தரமான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி சி85 5ஜி அம்சங்கள் (Realme C85 5G Specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்இ 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில். ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் இதில் உள்ளது.
ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் மூலம் 1080பிக்சல் வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழை பெற்றுள்ளது ரியல்மி சி85 5ஜி போன்.
அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker), 400% ஆட்டோ வால்யூம் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 215 கிராம் ஆகும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் தற்போது ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, க்ளோனாஸ்,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி85 5ஜி போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.16,999-ஆக உள்ளது. பீகாக் கிரீன், பேரட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்கலாம். தற்போது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.500 கூப்பன் சலுகையும் இந்த போனுக்கு உள்ளது. எனவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








