மார்ச்.7 குறிச்சாச்சு.. அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 144Hz டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் பட்ஜெட் விலைக்கு களமிறங்க இருக்கும் ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற மார்ச் 7ஆம் தேதி இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரியல்மி தளத்தில் முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரியல்மி சி சீரிஸ் மாடல்கள் எப்போதும் பட்ஜெட்டிலேயே வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனையும் பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கலாம்.

ரியல்மி சி83 5ஜி அம்சங்கள் (Realme C83 5G Specifications): 6.8 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி சி83 5ஜி கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. ஒரு நாள் முழுக்க பயன்படுத்தினாலும் 50 சதவீத சார்ஜ் மீதம் இருக்கும். 27.7 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கிறது.
890.5 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை பேக்கப் கொடுக்கிறது. 15.6 மணி நேரங்களுக்கு கேமிங் பிளேபேக் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி கிடைப்பதால், ஏஐ பவர் சேவிங் (AI Power Saving), ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கிடைக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
ஆகவே, ஷாக் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைத்துள்ளது. ப்ளூமிங் பர்பிள் (Blooming Purple) மற்றும் ஸ்ப்ரவ்டிங் கிரீன் (Sprouting Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல பட்ஜெட் விவரங்களும் தெரியவில்லை. இருப்பினும், ரியல்மி சி85 5ஜி (realme C85 5G) ஸ்மார்ட்போனானது, இந்திய மார்கெட்டில் ரூ.16,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். அதைவிட மலிவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மார்ச் 7ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும்.
ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனிலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்ஸ் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்க முடியும். சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதே கேமரா சிஸ்டம் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications