Realme அடிச்சான் பாரு.. ரூ.13,499 போதும்.. 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ், விலை மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருப்பது தெரிகிறது. இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நிறுவனத்தின் சி சீரிஸ் மாடல்கள் மலிவான விலைக்கு அதிக பேட்டரி கேபாசிட்டி கொடுத்து வருகின்றன. முன்னதாக 6000mAh பேட்டரியுடன் ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போன் வெளியாகியது. மலிவான விலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. விலை விவரங்கள் கசிந்துள்ளன.

Xpertpick வழியாக கசிந்த தகவலின்படி இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனில் 3 வேரியண்ட்கள் கிடைக்க உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499 ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,499 ஆகவும் இருக்கப் போகிறது.
மேலும், ஸ்பிரூட்டிங் கிரீன் (Sprouting Green) மற்றும் ப்ளூமிங் பர்பிள் (Blooming Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் போக 7000mAh பேட்டரி கொண்ட மாடலாகவும் வெளியாக இருப்பது கசிந்த தகவல் வழியாக தெரியவந்துள்ளது. மேலும், MIL-STD 810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைக்கிறது.
இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல ரியல்மி நிறுவனம், இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், விலை விவரங்களே கசிந்துவிட்டது. ஆகவே, பீச்சர்கள் படிப்படியாக வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
ரியல்மி சி73 5ஜி அம்சங்கள் (Realme C73 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) உள்ளது. 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், 7.94 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுத்துள்ளது. 197 கிராம் எடை கொண்டுள்ளது.
32 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்து இருக்கிறது. ரூ.10,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி சி83 5ஜி மாடலில் 7000mAh பேட்டரி கிடைப்பதால், ரூ.13,499 பட்ஜெட்டில் வரலாம்.


Click it and Unblock the Notifications