Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்.. 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 144Hz டிஸ்பிளே, IP64 ரேட்டிங், 8 ஜிபி ரேம், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ரூ.12,000 பட்ஜெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இப்போது மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. 6000mAh பேட்டரி, 7000mAh பேட்டரி மாடல்களில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றன. இப்படி பெரிய பேட்டரியை கொடுத்தும், பட்ஜெட் விலையை நிர்ணயம் செய்வதில் ரியல்மி நிறுவனம் தனியிடம் பிடித்து வருகிறது.

விட்ராதீங்க ப்ரோ.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்.. 7000mAh பேட்டரி!

இந்த லிஸ்ட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் IP64 ரேட்டிங் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களுடன் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் களமிறக்கப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது, 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது 32 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியுடன் ரூ.13,499 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.675 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,824 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக இஎம்ஐ ஆப்ஷன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பிளிப்கார்ட் தளத்தில் பெற்று கொள்ளலாம். இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

ரியல்மி சி83 5ஜி அம்சங்கள் (Realme C83 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டும் மார்கெட்டில் கிடைக்கிறது. 8.4 எம்எம் தடிமனில் 7000mAh பேட்டரி பேட்டரியை கொடுத்து உள்ளது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த ரெசிஸ்டன்ட் போக எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை கொடுத்து உள்ளது. ப்ளூமிங் பர்பிள் (Blooming Purple) மற்றும் ஸ்ப்ரவ்டிங் கிரீன் (Sprouting Green) ஆகிய 2 கலர்களில் பிரீமியம் லுக் கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி கிடைப்பது வரவேற்க வேண்டியதாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C83 5G With 144Hz Display 7000mAh Battery 15W Charging At 32 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X