Home
Mobile

அதிரி புதிரி ஆர்டர்.. 7000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்க்பட்டு ரூ.16,499 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி83 5ஜி அம்சங்கள் (Realme C83 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதுவும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ பூஸ்ட் (AI Boost), டைனாமிக் ரேம் (Dynamic RAM) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் 6.8 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1570 x 720 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் 7000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸபிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant), உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.

Best Mobiles in India

English summary
realme C83 5G phone with 7000mAh Battery is available at a 18 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X