மார்க்கெட்டே திணறப்போகுது.. 5,600mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி75எக்ஸ் (Realme C75x) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் தற்போது மலேசியாவின் SIRIM சான்றிதழ் தளத்தில் RMX5020 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே இந்த போன் முதலில் மலேசியாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு மற்ற நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும்.
குறிப்பாக ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த அட்டகாசமான ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி75எக்ஸ் அம்சங்கள் (Realme C75x Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080பிக்சல்ஸ், 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் Realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் 24ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த அசத்தலான ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உளளன.
5600mAh பேட்டரி உடன் இந்த அசத்தலான ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5G, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








