செய்கைனா இதுதான்.. ரூ. 18,000 பட்ஜெட்ல 24GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்தனு சொல்லும்படியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் லைட்னிங் கோல்டு டிசைனில் ரியல்மி சி75 (Realme C75) போன் களமிறங்கி இருக்கிறது. ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த ரியல்மி சி75 போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரியல்மி போன் டிசைனிலேயே கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது. அதிலும் லைட்னிங் கோல்டு (Lightning Gold) வேரியண்ட் கண்களை கவருகிறது. இதுபோக பிளாக் (Black) கலர் வேரியண்ட் இருக்கிறது. ஆர்மோர்செல் டெம்பர்ட் கிளாஸ் (ArmorShell Tempered Glass) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. 360 டிகிரி ஷாக்ப்ரூஃப் (Shockproof) கிடைக்கிறது.

ரியல்மி சி75 அம்சங்கள் (Realme C75 Specifications): ஆர்மோர்செல் டெம்பர்ட் கிளாஸ் புரொடெக்சனுடன் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 690 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 180Hz டச் சாம்பிளிங் இருக்கிறது.
மேலும் மினி கேப்சூல் 3.0 (Mini Capsule 3.0) பீச்சரை பேக் செய்துள்ளது. இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ கிளியர் ஃபேஸ் (AI Clear Face) கிடைக்கிறது. மேலும் ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smart Loop) போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.
8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. பர்ஃபாமென்ஸ் சொல்லிக்கொள்ளும்படி எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 12என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியே ஜி92 மேக்ஸ் (12nm Octa Core MediaTek Helio G92 Max) சிப்செட் மற்றும் ஓரளவு கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆனால், ரேம் மற்றும் மெமரியில் மிரட்டிவிட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 16 ஜிபி டைனாமிக் ரேம் (16GB Dynamic RAM) கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதுபோக 24ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் மூன்று மாடல்களிலும் 1 டிபி எஸ்டி சிலாட் இருக்கிறது.
இந்த ரியல்மி சி75 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது ரியல்மியின் யுஐ 5.0 (UI 5.0) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-Ported Speaker) வருகிறது, ஸ்டீரியோ கிடையாது. அதேபோல இன்டிஸ்பிளே சென்சார் இல்லை, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
இந்த ரியல்மியில் 6000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,900ஆக இருக்கிறது. இப்போது வியட்நாம் நாட்டில் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அதன்பிறகு இந்திய மார்கெட்டில் இந்த ரியல்மி சி75 மாடலை எதிர்பார்க்கலாம்.
இதே பட்ஜெட்டில் இங்கும் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் சி சீரிஸ் போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் இந்த மாடல்களில் பட்ஜெட் செக்மெண்டில் கிடைப்பதால், விற்பனையும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இந்த ரியல்மி போனின் வரவேற்பு எப்படி என்பதை அடுத்த சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications