இதை மட்டும் விடவே கூடாது.. வெறும் ரூ.11,745 போதும்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 32MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக களமிறங்கிய ரியல்மி சி75 5ஜி (realme C75 5G) ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் கூப்பன் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், விலை குறைப்பும் கொடுக்கப்படுகிறது. கிடைக்காத பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 2 டிபிக்கான மெமரி, கேலக்ஸிகோர் சென்சாருடன் மெயின் கேமரா, IP64 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் எச்டிபிளஸ் டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 12,345 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.600 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,745 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.11,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ரியல்மி சி75 5ஜி அம்சங்கள் (Realme C75 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆர்மர்ஷெல் புரொடெக்டன் (ArmorShell Protection) கொண்ட 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஐபிஎஸ் (IPS) மாடல் டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர் டெப்த் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.
கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GALAXYCORE GC32E2) சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஹைடெபனிஷன் மோட் (HighDefinition Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், சூப்பர்டெக்ஸ்ட் மோட் (SuperText Mode) கிடைக்கிறது.
டூயல் வியூ வீடியோ (Dual-view Video), டைம்-லேப்ஸ் போன்ற வீடியோ பீச்சர்களும் கிடைக்கின்றன. இதில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆர்மர்ஷெல் புரொடெக்சன் போக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) உள்ளது.
இந்த பட்ஜெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொடுக்கிறது. ஆகவே, 6000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களில் 2 டிபிக்கான மெமரி பயன்படுத்தும்படி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி உள்ளது. லில்லி ஒயிட் (Lily White), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் பர்பிள் பிளாசம் (Purple Blossom) கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications







