Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. விற்பனைக்கு வந்தது புது Realme 5ஜி போன்..

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி75 5ஜி (Realme C75 5G) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் முதல் முறையாக இந்த புதிய ரியல்மி போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ரியல்மி சி75 5ஜி போனின் விலை, அம்சங்கள், சலுகைகள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி75 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.500 வரை தள்ளுபடியும் உள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. விற்பனைக்கு வந்தது புதி ரியல்மி 5ஜி போன்..

ரியல்மி சி75 5ஜி அம்சங்கள் (Realme C75 5G specifications): தரமான டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் ரியல்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கிறது.

6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. மிட்நைட் லில்லி (Midnight Lily), பர்பிள் ப்ளாசம் (Purple Blossom) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் 32எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

குறிப்பாக 6000mAh பேட்டரி உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ-தர சான்றிதழைக் கொண்டுள்ளது இந்த போன்.

5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம், சிங்கிள் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) வசதியும் இந்த போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C75 5G goes on sale in India today: check specification, price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X