ஓயாத ஆஃபர் அலை.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரியல்மி சி75 5ஜி (realme C75 5G)ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 6000எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது இந்த போன். இப்போது ரியல்மி சி75 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு விற்பனைகளைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,345 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி75 5ஜி அம்சங்கள் (Realme C75 5G specifications): தரமான டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் ரியல்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 32எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த ரியல்மி சி75 5ஜி போனை மிட்நைட் லில்லி (Midnight Lily), பர்பிள் ப்ளாசம் (Purple Blossom) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) நிறங்களில் வாங்க முடியும். 6000mAh பேட்டரி உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
அதுவும் 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம், சிங்கிள் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications